கிரிக்கெட்

கடைசி டி20 - மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

இத்தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

பெங்களூரு,

மழை காரணமாக கடைசி டி20 போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டி20 தொடர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

கடைசி டி20 போட்டி

இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.

டாஸ்

இந்த நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT