கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: இந்தியா - இலங்கை நாளை மோதல்

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில் இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் காலை 10 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் நாளை தொடங்கும் டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

SCROLL FOR NEXT