கேப்டவுன்,
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 429 ரன்கள் குவித்தது.
இதனால் 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் சிறப்பாக விளையாடிய ரிக்கெல்டன் 219 பந்துகளில் 101 ரன்களும் முல்டர் 221 பந்துகளில் 115 ரன்களும் விளாசினர்
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 134.4 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கடைசி நாளில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
மாட் ரென்ஷா ரன் ஏதும் எடுக்காமலும், மார்னஸ் லபுஷேன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 14 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 27 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து வந்த வீரர்களும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நாதன் லயன் மட்டும் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 57.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றுள்ளது.