கொழும்பு,
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 503 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், கடைசி டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பாசிந்து சூரியபந்தாரா 65 ரன்களிலும், தனஞ்சய டி சில்வா 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இலங்கை 373 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.