கிரிக்கெட்

3-வது இடத்தில் முதல் இடம்... 13 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

ரிக்கி பாண்டிங் 12,662 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆக்லாந்து,

3-வது இடத்தில் களமிறங்கி 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

13 ஆயிரம் ரன்கள்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்கிய கோலி 74 ரன்கள் எடுத்தார். அவர் 12 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் களமிறங்கி 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.

பாண்டிங்

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3-வது இடத்தில் களமிறங்கி 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 12,662 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கரா 9,747 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 7,774 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

SCROLL FOR NEXT