திருவனந்தபுரம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு வலு வான இந்திய அணியை கட்டமைப்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் களம் இறங்குவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருப்பதால் ஸ்ரேயாஸ் அய்யர், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை.
இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலியும், பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவும் நல்ல நிலையில் இருக்கின்ற னர்.
உலக தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இல்லாததால் வெஸ்ட்இண்டீஸ் அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிக்கு தயாராவதற்கு, இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆர்வம் காட்டுகிறது.
இந்திய மண்ணில் 13-வது முறையாக ஒருநாள் போட்டி தொடரில் கால்பதிக் கும் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கு 2002-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட சோகத்துக்கு முடிவு கட்ட தீவிரம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ரூதர்போர்டு, கேசி கார்டியும், பந்து வீச்சில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்சும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அதனால் கடும் சவால் அளிப்பார்கள் என நம்பலாம்.
இவ்விரு அணிகள் இதுவரை 142 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 72-ல் இந்தியாவும், 64-ல் வெஸ்ட்இண்டீ சும் வென்றுள்ளன. இரு ஆட்டம் டையில் முடிந்தது. 4 ஆட்டம் முடிவு இல் லாமல் போனது.
வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்.
போட்டி நடக்கும் திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 ஒருநாள் போட்டியில் ஆடி இரண்டிலும் (வெஸ்ட்இண்டீஸ், இலங்கைக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. இன்று இங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.