கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்கிறது.

இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா:

கில் , ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் , நமன் திர், அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து:

டிம் சீபர்ட், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டபி, பிளேயர் டிக்னர்

SCROLL FOR NEXT