கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

இந்திய அணியில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வதோதரா,

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே அணி.

முதலில் பேட்டிங்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பெலவ்டு பிசா

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு பெலவ்டு பிசா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். மிச்செல் மாவுங்கா 23 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார்.

மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதால் ஜிம்பாப்வே அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்

இந்திய அணியின் பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளும், கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT