கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

ஒருநாள் தொடரிலும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

வதோதரா,

இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதலில் பேட்டிங்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (அக்டோபர் 23) வதோதராவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

வென்ற இந்தியா

இதற்கு முன்பு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இதனால் ஒருநாள் தொடரிலும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ஒருநாள் தொடருக்கான அட்டவணை

முதல் போட்டி – அக்டோபர் 23

2-வது போட்டி – அக்டோபர் 25

3-வது போட்டி – அக்டோபர் 28

மூன்று போட்டிகளும் வதோதராவில் நடைபெறுகின்றன.

SCROLL FOR NEXT