கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

கயானா,

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. மழையின் காரணமாக ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ் அணி 5.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் 3 ரன்னுடனும், இவின் லீவிஸ் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.