கிரிக்கெட்

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லோட் டீன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

செம்ஸ்போர்டு,

10-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை இங்கி லாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதற்கு தயாராகும் பொருட்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந் தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முத லாவது டி20 கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லோட் டீன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.