கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 199 ரன்கள் குவிப்பு..!

இந்தியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் தொடங்கியது.

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கி உள்ளது.

இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 44 ரன்களும் (32 பந்துகள்) இஷான் கிஷன் 89 ரன்களும் (56 பந்துகள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும் (28 பந்துகள்) ரவீந்திர ஜடேஜா 3 ரன்களும் (4 பந்துகள்) எடுத்து களத்தில் நின்றனர். இந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. தற்போது 200 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.