கிறிஸ்ட்சர்ச்
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா -நியூசிலாந்து இடையி லான முதலாவது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-2 என்ற கணக்கில் முடித்த கையோடு நியூசிலாந்தில் கால்பதித்துள்ளது. நமது நாட்டு ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங் குக்கு சாதகமாக இருந்தன. அந்த தொடரில் மொத்தம் 105 சிக்சர்சர்கள் அடிக்கப்பட்டன.
ஆனால் நியூசிலாந்து சீதோஷ்ண நிலை முற்றிலும் வேறு விதமானது. அது மட்டுமின்றி இந்திய அணி அங்கு அரிதாகவே சென்று விளையாடுகிறது. காற்றின் தாக்கம், மைதானத்திற்கு வெளியே தயார் செய்யப்பட்டு, அதை அப்படியே பெயர்த்து கொண்டு வந்து பொருத்தப்பட்ட செயற்கை ஆடுகளங் கள், சில தனித்துவமான வடிவம் கொண்ட மைதானங்கள் உள்ளிட்டவை கடும் சவாலான விஷயங்களாகும். மேலும் நீண்ட தூர பயணக் களைப்பில் இருந்து மீண்டு இங்குள்ள சூழலுக்கு ஏற்ப சீக்கிரமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன். திலக் வர்மா என அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் பந்து வீச்சு தான் கவலைக்குரியதாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கினர். பும்ரா, ஹர்திக் பாண்ட்யா போன்ற முன்னணி பவுலர்கள் இல்லாதது பின்னடைவு தான். இருப்பினும் 4 ஆண்டுக்கு பிறகு அனுபவ வீரர் புவனேஷ்வர்குமார் திரும்பி இருப்பது உதவிகரமாக இருக்கும்.
மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் வல வானது. பின் ஆலென், டிவான் கான்வே, செய்பெர்ட், டேரில் மிட்செல், பிலிப்ஸ் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சா ளர்கள் பெர்குசன். மேட் ஹென்றி, நாதன் சுமித் குடைச்சல் கொடுக்க காத் திருக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் ரச்சின் ரவீந்திரா இடம் பெற வில்லை.
இவ்விரு அணிகள் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த 20 ஓவர் உல கக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சந்தித்தார்கள். அதில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. அந்த தோல்விக்கு பதிலம் கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இவ்விரு அணிகள் சர்வேதச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 31 ஆட்டங் களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் இந்தியாவும், 11-ல் நியூ= லாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டம் டையில் முடிந்தது.
இரு நாட்டு நேரடி 20 ஓவர் தொடரை எடுத்துக் கொண்டால் இந்தியா 6 முறையும், நியூசிலாந்து 3 முறையும் தொடரை கைப்பற்றியுள்ளன.