கிரிக்கெட்

முதல் டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லாகூர்,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 லாகூரில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பாகிஸ்தான்:

சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், பாபர் ஆசம், சல்மான் ஆகா, பகார் ஜமான், உஸ்மான் கான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது.

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மேட் ரென்ஷா, கூப்பர் கோனொலி, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், ஜாக் எட்வர்ட்ஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஜாம்பா, மஹ்லி பியர்ட்மேன்.