கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட்

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

காலே,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா 462

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை 284

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது. ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.