டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக கிரீன் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். கடந்த வாரம் போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது பேட்டிங் செய்த அவர்,பந்து தாக்கியதில் காயமடைந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்திலும் கிரீன் பங்கேற்கவில்லை. தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
27 வயதான கிரீன், இந்தத் தொடரின் பின்னர் நடைபெறும் போட்டிகளில் களமிறங்குவார் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இருப்பினும், அவர் மீண்டும் களமிறங்கினால் பேட்டராக மட்டுமே விளையாட வேண்டிய சூழல் ஏற்படலாம்.
முதல் டெஸ்ட் நெருங்கும் நிலையில், வெப்ஸ்டரை களமிறக்குவதா அல்லது வேறு அணிச் சேர்க்கையை தேர்வு செய்வதா என்பதை ஆஸ்திரேலியா முடிவு செய்ய உள்ளது.