மிர்புர்,
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 413 ரன்னும், பாகிஸ்தான் 386 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தொடக்க ஆட்டக் காரர்கள் மக்துமுல் ஹசன் ஜாய் 5 ரன்னிலும், ஷத்மான் இஸ்லாம் 10 ரன் னிலும் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, மொமினுல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 128 ரன்னை எட்டிய போது மொமினுல் ஹக் 56 ரன்னில் ஷகீன் ஷா அப்ரிடி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் சிக்கினார். முன்னதாக மழை காரணமாக ஆட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் வங் காளதேச அணி 50.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து 179 ரன்கள் முன்னிலை பெற்றது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 58 ரன்களு டனும், முஷ்பிகுர் ரஹிம் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஷாண்டோ 87 ரன்கள் எடுத்து அவுட்டானார். 2வது இன்னிங்சில் வங்காளதேசம் 9 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்துள்ள நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியின் அப்துல்லா பைசல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார். சல்மான் ஆகா 26 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேசம் சார்பில் நஹித் ரானா 5 விக்கெட்டும், தஜ்ஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.