கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இந்தியா - இலங்கை நாளை மோதல்

இந்திய நேரப்படி நாளை காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட்

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இலங்கையில் உள்ள காலி நகரில் இப்போட்டி நடைபெற உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால் நாளை தொடங்க உள்ள ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.