கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரையன் பென்னட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 5) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

ஜிம்பாப்வே

சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது. இதனால் டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணி கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரையன் பென்னட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

SCROLL FOR NEXT