கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஓய்வு..ரசிகர்கள் அதிர்ச்சி

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெல்லிங்டன்,

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கேன் வில்லியம்சன் கூறியதாவது,

இது குறித்து நான் சிறிது காலமாகவே யோசித்து வந்தேன். ஆனால், இப்போதுதான் அதற்கான சரியான தருணம் வந்துள்ளது.இது நான் மிகவும் நேசிக்கும் ஒரு அணி. இவ்வளவு நீண்ட காலம் இதன் ஒரு பகுதியாக இருந்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இது எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாகவே இருக்கும்.என தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்காக 378 போட்டிகளில் விளையாடி, எண்ணற்ற பேட்டிங் சாதனைகளைப் படைத்ததுடன், கிரிக்கெட் உலகின் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவராகவும் திகழ்ந்தார். 35 வயதான இவர், 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்து, நியூசிலாந்து அணிக்காக சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.