கிரிக்கெட்

சூர்யவன்ஷியை கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரரை விளாசிய முன்னாள் பாக். வீரர்

சயிம் அயுப்பின் செய்கை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நகோயா,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பாகிஸ்தான் வீரர் சயிம் அயுப் கிண்டல் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

சூர்யவன்ஷி அவுட்... சயிம் அயுப் செய்கை

இந்த போட்டியில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தபோது, பாகிஸ்தான் வீரர் சயிம் அயுப் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்ற செய்கையை செய்து கொண்டாடினார்.

சூர்யவன்ஷியின் வயதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இவ்வாறு செய்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதை செய்ய வேண்டுமா?’

இந்த நிலையில், சயிம் அயுப்பின் செய்கையை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தங்கள் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத நிலையிலும், சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சயிம் அயுப்பை விமர்சித்தார்.

‘சூர்யவன்ஷி சிறுவன் அல்ல... சர்வதேச வீரர்’

கம்ரான் அக்மல் கூறியதாவது:

“சூர்யவன்ஷிக்கு 13, 14 அல்லது 15 வயதாக இருந்தாலும், அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார். அவர் தனது நாட்டுக்காக விளையாடுகிறார்.

சயிம் அயுப் சிறுவன் அல்ல. அவர் தனது செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களுக்காக இதுபோன்ற செயல்களை செய்வதை விட, தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.”

என்று கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் விவாதம்

சயிம் அயுப்பின் செய்கை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தற்போது அவருக்கு எதிராக அவரது நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரே கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT