2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக உஸ்மான் கவாஜா தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடுமையாகப் பதிலளித்துள்ளார். தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அப்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தும் விஷயம் தெரிந்திருந்ததாக கவாஜா கூறியிருந்தார். இதனை மறுத்த கம்மின்ஸ், கவாஜாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் பந்தை சேதப்படுத்தும் திட்டம் தெரிந்திருந்ததாக உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
களத்தில் மணல் காகிதம் பயன்படுத்தப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது.
தன்னையும் மற்ற சில வீரர்களையும் பந்தை சேதப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களாக கவாஜா சித்தரிப்பது முற்றிலும் தவறானது. அதேபோல், மணல் காகிதத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு கேமரூன் பேன்கிராஃப்ட்டிடம் கவாஜாவே கூறியதாகத் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன். கவாஜா தனது நண்பர் என்றாலும், மற்றவர்களின் வாழ்க்கையையும் நற்பெயரையும் பாதிக்கும் வகையில் பேசுவது சரியல்ல.ஒருவர் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மின்ஸ் கருத்துக்கு வார்னர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இதனால் ஆஸ்திரேலிய வீரர்களிடம் மோதல் அதிகரித்துள்ளது.