சென்னை,
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு நோ-பாலுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தம் 20 நோ-பால்களை வீசியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் 7 நோ-பால்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 நோ-பால்களும் வீசப்பட்டன.
இந்நிலையில், இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்துவதற்கு பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிப்பது அவசியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
நோ-பால் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதே வீரர் மீண்டும் நோ-பால் வீசினால் அபராதத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.