கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ’இந்த 2 அணிகள்தான் மோதும்’; கிளென் மெக்ராத் கணிப்பு

அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்தியா கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்னை,

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் , டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் என கணித்துள்ளார். அதேவேளை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவர் பேசுகையில், “இங்கிலாந்து ஒரு ஆபத்தான அணி. அந்த நாள் அவர்களுக்கு கிளிக் ஆகிவிட்டால் எதையும் செய்யக்கூடியவர்கள். இந்த தொடரில் அவர்களுக்கு சற்று அதிர்ஷ்டமும் கைகொடுத்துள்ளது. நேபாளத்துக்கு எதிரான போட்டியில் அவர்கள் தோல்வியடையக் கூடிய நிலை இருந்தது. இத்தாலியுடனான போட்டியும் மிகவும் நெருக்கடியாக அமைந்தது. இருப்பினும் அவர்கள் வெற்றி பெற்றனர்” என்று மெக்ராத் கூறினார்.

மேலும், “இந்தியா இந்த தொடரில் எப்படி விளையாடி வந்ததோ அதேபோல் விளையாடினால், இறுதிப்போட்டிக்கு செல்லும். என் கணிப்பில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடும் ,” என்று அவர் கூறினார்.