கிரிக்கெட்

அதிக முறை ஆட்டநாயகன் விருது... கப்டிலின் சாதனையை சமன் செய்த கிளென் பிலிப்ஸ்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

ஆக்லாந்து,

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற மார்ட்டின் கப்டிலின் சாதனையை கிளென் பிலிப்ஸ் சமன் செய்துள்ளார்.

அதிரடி சதம் அடித்த பிலிப்ஸ்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார்.

வெறும் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்த அவர், தனது 3-வது சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.

260 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன்

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதற்காக பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இது சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அவர் வாங்கும் 10-வது ஆட்டநாயகன் விருது ஆகும். இதன் மூலம் , சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற மார்ட்டின் கப்டிலின் சாதனையை கிளென் பிலிப்ஸ் சமன் செய்துள்ளார்.

குறைந்த போட்டிகளில் சாதனை

மார்ட்டின் கப்டில் 122 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். கிளென் பிலிப்ஸ் 101 போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

நியூசிலாந்து வீரர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் கோலின் முன்ரோ 7 விருதுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT