லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவிக்க தடுமாறியது. கான்வே 9 ரன்களும் , டாம் லாதம் 27 ரன்களும் , ஹென்றி நிகோல்ஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் டேரில் மிட்சேல் சிறப்பாக விளையாடினார். அவர் 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து விளையாடிய அவர் சதமடித்தார். கைல் ஜேமிசன் 41 ரன்கள் எடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.