கிரிக்கெட்

விமானத்தை இயக்கி, தரையிறக்கிய கிளென் பிலிப்ஸ்....வீடியோ

விமானத்தை இயக்கி, தரையிறக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் விமானத்தை இயக்கி, தரையிறக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்லாந்து ஆர்ட்மோர் விமானப் பயிற்சி நிறுவனத்தில் சிறிய வகை விமானம் ஒன்றை இயக்கி அதனை தரையிறக்கி கிளென் பிலிப்ஸ் அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.