கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வெல்வது தான் இலக்கு: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

'சூப்பர் மரியோ கேலக்ஸி' திரைப்படத்தின் இந்திய புரமோஷன் நிகழ்ச்சியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்றார்.

மும்பை,

'சூப்பர் மரியோ கேலக்ஸி' திரைப்படத்தின் இந்திய புரமோஷன் நிகழ்ச்சியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்,

சிறுவயதில் எனது சகோதரர்களுடன் சேர்ந்து 'சூப்பர் மரியோ' விளையாடியது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. அந்த கேமில் வரும் 'மரியோ' கதாபாத்திரம் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவது எனக்கு எப்போதும் உத்வேகத்தைத் தரும்.

ஏற்கனவே ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளோம். தற்போது இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையைத் தட்டித்தூக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். இந்திய அணியின் தற்போதைய ஃபார்ம் மற்றும் தன்னம்பிக்கை, மீண்டும் ஒரு உலக சாதனை படைக்க உதவும் என தெரிவித்தார்.