செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருணா மோதுகின்றனர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.
இதில் 2-வது கிளாசிக்கல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா 95-வது நகர்த்தலில் டிரா கண்டார். கிளாசிக்கல் சுற்று முடிவில் கருணா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.