கிரிக்கெட்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய குஜராத் வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குஜராத் வீரர் அசோக் சர்மா வீசிய பந்து நடப்பு ஐபிஎல் தொடரில் வேகமாக வீசப்பட்ட பந்து என்ற சாதனையை படைத்துள்ளது.

15.6 ஓவரில் அசோக் சர்மா 154.2 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் வேகமாக வீசப்பட்ட பந்தாக மாறியுள்ளது. அதேபோல் இதுவரை நடைபெற்ற ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் வேகமாக பந்து வீசிய வீரர் பட்டியலில் அசோக் குமார் 3வது இடம்பிடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வேகமாக வீசப்பட்ட பந்துகள், வீரர்கள்

1. அசோக் சர்மா - 154.2 கிலோ மீட்டர் வேகம்

2. அன்ரிச் நார்ட்ஜே - 150.9 கிலோ மீட்டர் வேகம்

3. கார்த்திக் தியாகி - 149.7 கிலோ மீட்டர் வேகம்

4. ரபாடா - 149.1 கிலோ மீட்டர் வேகம்

ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் வேகமாக வீசப்பட்ட பந்துகள், வீரர்கள்

1. உம்ரான் மாலிக் - 157 கிலோ மீட்டர் வேகம்

2. மயங்க் யாதவ் - 156.7 கிலோ மீட்டர் வேகம்

3. அசோக் சர்மா - 154.2 கிலோ மீட்டர் வேகம்