கிரிக்கெட்

லக்னோ அணிக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.