கிரிக்கெட்

ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்? - குஜராத்திற்கு எதிராக ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு

ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சண்டிகர்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன.

இதையடுத்து, பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேவேளை, எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்திய ராஜஸ்தான் குவாலிபையர் 2 ஆட்டத்திற்குள் நுழைந்தது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான குவாலிபையர் 2 ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், குவாலிபையர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ், எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ்

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது.