கிரிக்கெட்

குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது.

ஆமதாபாத்,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட் டன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுகட்டியது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

ரகானே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டிம் சீபாராட் 19 ரன்களில் வெளியேறினார். ரகுவன்ஷி 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கொல்கத்தா அணியில் கிரீன் சிறப்பாக விளையாடினார். பொறுப்புடன் விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். கிரீன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது. குஜராத் அணியில் ரபடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தநிலையில், 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், வைபவ் அரோரா மற்றும் ரமன்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.