கிரிக்கெட்

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு இவர் தகுதியானவர் - ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மொஹாலி,

2026 டி20 உலகக்கோப்பை தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. எனினும், தனிப்பட்ட முறையில் சில போட்டிகளில் அவரது பார்ம் மற்றும் அணியின் சில நட்சத்திர வீரர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட உள்ளதாகவும், புதிய கேப்டன் பொறுப்பு சஞ்சு சாம்சன் அல்லது ஸ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு ஸ்ரேயஸ் ஐயர் தகுதியானவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பஞ்சாப் கிங்சின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடபாக அவர் ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது;

'சூர்யகுமார் யாதவுக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சில போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் முதன்மையானவராக ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார் என கருதுகிறேன். தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இப்போதுதான் அவர் மிகவும் முதிர்ச்சியான வீரராக திகழ்கிறார். அத்துடன் தனது ஆட்டத்திறனில் உச்சத்தில் இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.