போர்ட் ஆப் ஸ்பெயின்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டினோ பெஸ்ட். 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய 23 வயதில், சொந்த மண்ணில் முதன்முறையாக களமிறங்கிய டினோ, 25 டெஸ்ட் போட்டிகள், 26 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2012-ம் ஆண்டில் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 11-வது வீரராக களமிறங்கி 95 ரன்கள் எடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், இந்த சாதனையை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் (98 ரன்கள்) பின்னர் முறியடித்து விட்டார்.
டினோ, மைண்ட் தி விண்டோஸ் மை ஸ்டோரி என்ற பெயரில் எழுதிய சுயசரித புத்தகத்தில், தன்னுடைய கிரிக்கெட் காலத்தில் 500 பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தியில், நான் இளம்பெண்களை நேசிக்கிறேன். அவர்களும் என்னை நேசிக்கின்றனர். உலகிலேயே மொட்டை தலையுடன் காட்சி தரும் சிறந்த நபர் என நான் என்னை நினைத்து கொள்கிறேன். நான் ஒரு கருப்பு பிராட் பிட் (நடிகர்). கிரிக்கெட் வீரராக நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அப்போது இளம்பெண்களை சந்தித்து பேசியுள்ளேன்.
அவர்களுடன் டேட்டிங் சென்றேன். அவர்களுடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் 500 முதல் 650 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன் என்று பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், அதிலும் ஆஸ்திரேலிய இளம்பெண்கள் மிக அழகானவர்கள். அவர்கள் ஆச்சரியமளிப்பவர்கள் என நான் நினைப்பேன். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்துவார்கள். அழகான உடலமைப்பு கொண்டவர்கள். 2005-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தபோது, 40-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டேன் என டினோ தெரிவித்து இருக்கிறார்.