பெங்களூரு,
இந்திய இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா தனது கெரியரில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இனி அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்க முன்னாள் நட்சத்திரம் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் ஷர்மா சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டிய டி வில்லியர்ஸ், “இப்போது அவருக்கு 25 வயது. இனி பொறுப்பை ஏற்க வேண்டிய காலம் இது. ஊடக அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளை சமாளிக்க வேண்டும்,” என்றார்.
சர்வதேச டி20 தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரராக இருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அதை மனதளவில் சமாளிப்பதே வெற்றிக்கான முக்கிய அம்சம் என அவர் வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், ஒவ்வொரு போட்டி சூழ்நிலையையும் புரிந்து கொண்டு விளையாட வேண்டும் என்றும், எப்போதும் அதிரடியாக ஆடாமல், தேவையான போது பொறுமையுடன் ஆட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
வருகிற 28-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2026 தொடக்கப்போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.