கிரிக்கெட்

ஹாங்காங் சிக்சஸ் போட்டி: இந்தியாவுக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

சிறப்பாக விளையாடிய மார்ட்டின் ஆண்டர்சன் அரைசதம் அடித்தார்

ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மோங் கோக்கில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணி மோதுகின்றன.

மார்ட்டின் ஆண்டர்சன்

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் குருனல் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய மார்ட்டின் ஆண்டர்சன் அரைசதம் அடித்தார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.

SCROLL FOR NEXT