ஹாங்காங்,
ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் 'குரூப் சி' லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஹாங்காங்கின் மோங் கொக் பகுதியில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சசாங்க் சிங் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். அவரை தவிர மற்ற வீரர்களால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.
இதையடுத்து 89 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் அப்பாஸ் அப்ரிடி 8 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.
மற்றொரு வீரரான கவாஜா நபாய் 12 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 3.5 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.