கிரிக்கெட்

நமது மாற்று வீரர்களின் பலம் எவ்வளவு வலுவாக உள்ளது: பிசிசிஐ

சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய டி20 அணி தங்கம் வென்றது. அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது,

மிகவும் அருமை. உலக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா இப்போது ஒரு வல்லரசாக உருவெடுத்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று வருகிறோம். இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் விளையாடியுள்ளது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தற்போது நமது மாற்று வீரர்களின் பலம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுக்கும் முழுப் பெருமையும் சேரும். மேலும் அனைத்து ஸ்டாஃப்களுக்கும் முழுப் பெருமையும் சேரும். இது ஒட்டுமொத்த நாட்டையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT