கிரிக்கெட்

மும்பை அணியின் சாதனையை சமன் செய்த ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி ஏற்கனவே அந்த அணியிடம் அடைந்த தோல் விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்து 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனிைய பறித்த ஐதராபாத் அணி ஏற்கனவே அந்த அணியிடம் அடைந்த தோல் விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.

இந்தப் போட்டியில் 200 மற்றும் அதற்கும் அதிக ரன்களை அடித்ததன் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200-க்கும் அதிக ரன்களை விளாசிய அணிகள் ஐதராபாத் அணி தற்போது மும்பை அணியுடன் சமன் செய்துள்ளது.