கிரிக்கெட்

நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்: வைபவ் சூர்யவன்ஷி

அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.

ஆமதாபாத்,

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் அசத்தி அனைவரது கவ னத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். பீகாரை சேர்ந்த 15 வயது சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண் டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

இந்த நிலையில், நான் விராட் கோலியின் ரசிகன் என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் பெங்களூரு அணியின் ரசிகன். நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் என் தோளில் கை வைத்து என்னிடம் பேசியபோது, ​​​​உண்மையாகவே அது ஒரு கனவு போல இருந்தது. அவர் பேசிய விதத்தைப் பார்த்தால், நான் சூப்பர் ஸ்டார் விராட் கோலியிடம் பேசுவது போல் எனக்குத் தோன்றவில்லை. நான் எதை நன்றாகச் செய்கிறேன், எங்கே முன்னேற வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எனக்கு விளக்கிய விதம் உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. என தெரிவித்துள்ளார்.