சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களில் 2 வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உஸ்மான் தாரிக் உள்ளார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தோனி வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்ட 'எம்.எஸ்.தோனி' 'தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன்.அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கள் இருவரது கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு வேலையில் இருந்தேன், அவரும் ஒரு வேலையில் இருந்தார். வரலாறு படைத்த ஒருவர் இங்கே இருக்கிறார் என உணர்ந்தேன்.நானும் சாதாரண மனிதன்தான். அதே பாதையை நான் தொடரலாம், ஆனால் மற்றவர்களைப் போல நான் நிறைய கடின உழைப்பு செலுத்த வேண்டும். எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன். என தெரிவித்துள்ளார்.