நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.44 வயதான டோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த சீசனில் காயம் காரணமாக ஆடாததால், தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் ரெய்னா, தோனியிடம் அடுத்த சீசனிலும் நீங்கள் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். இந்த தகவலை ரெய்னாவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ரெய்னா கூறியதாவது: “ஐபிஎல் 2026-ல் நீங்கள் விளையாடவில்லை. அது கணக்கில் வராது. அடுத்த ஆண்டு மீண்டும் வர வேண்டும் என்று நான் தோனியிடம் கூறினேன். அதற்கு அவர், ‘என் உடல் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது’ என்றார். அதற்கு நான், ‘எதையும் நாங்கள் நம்ப மாட்டோம். அடுத்த ஆண்டும் நீங்கள் விளையாடியே ஆக வேண்டும்’ என்று சொன்னேன். அது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் அவர் நேர்மறையான மனநிலையில்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்றார்.