சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. குழுவினரின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி,ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா வென்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல், ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் லாரா வோல்வார்ட் பெறும் மூன்றாவது ஐ.சி.சி. விருது இதுவாகும்.