Image Courtesy : AFP 
கிரிக்கெட்

20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?

ரோகித் சர்மா கேப்டனான பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

துபாய்,

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இதன் காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், 3-வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 6,336 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 5-வது இடத்தில் உள்ளது.

இந்த வருட இறுதியில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT