துபாய்,
ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். டேரில் மிச்செல் 2-வது இடத்திலும், இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்தியாவின் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ரஷித் கான் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்த வரிசையில் டாப் -10 இடத்திற்குள் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துலா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் அக்சர் படேல் ஒரு இடம் குறைந்து 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.