கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் இஷான் கிஷன் முதலிடம்

அபிஷேக் சர்மா 869 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மும்பை,

டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய வீரரான இஷான் கிஷன் 876 புள்ளிகள் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 869 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சாஹிப்சதா பர்ஹான் 848 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 4வது இடத்திலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்கள் திலக் வர்மா 6வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 8வது இடத்திலும் உள்ளனர்.