கிரிக்கெட்

பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க முடியாது – ஐசிசி திட்டவட்டம்!

மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

துபாய்,

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சிலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

கில்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீரர்கள் மற்றும் நடுவர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2022-ம்

ஆண்டு இந்தத் தடையை நிரந்தரமாக்க ஐசிசி முடிவு செய்தது.

இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கில், எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஏன் எச்சிலைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று புரியவில்லை என்றார். மேலும், நியூசிலாந்தில் பயன்படுத்தப்பட்ட குக்கபுரா பந்து 25 முதல் 30 ஓவர்களுக்குள்ளாகவே மென்மையாக மாறிவிட்டதாகவும், இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்

ஆனால், கில்லின் கோரிக்கைக்கு ஐசிசி உடனடியாக செவிசாய்க்கும் எண்ணத்தில் இல்லை. , பந்தின் தன்மையை செயற்கையாக மாற்றும் செயல்களுடன் எச்சிலைப் பயன்படுத்துவதையும் ஒப்பிட்டு, தற்போதைய விதிமுறையைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அந்த மாற்றத்தை அமல்படுத்த ஐசிசி தற்போது விரும்பவில்லை.

இதனால் பந்தை பளபளப்பாக்க எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT