புனே,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, இன்று முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் வெஸ்ட் இண்டீஸ்-ஸ்காட்லாந்து அணிகளும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளும் விளையாட உள்ளன.