சென்னை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (இந்தியா), டேரில் மிச்சேல் (நியூசிலாந்து) மற்றும் ஜோரூட் (இங்கிலாந்து) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் கேபி லூயிஸ் (அயர்லாந்து), சோபனா மோஸ்டரி (வங்காளதேசம்) மற்றும் சோபனா மோஸ்டரி (வங்காளதேசம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.